பக்கங்கள்

பக்கங்கள்

11 மார்., 2015

ந்துவீச்சாளர்களை புகழ்ந்து தள்ளும் டோனி

உலகக் கிண்ணப் போட்டிகளில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பாக உள்ளது என அணித்தலைவர் டோனி புகழாரம் சூட்டியுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து அணித்தலைவர் டோனி கூறுகையில், பயிற்சியாளர்களில் ஒருவர் கூறினார் 5 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளோம் என்று, இது உண்மையில் அபாரமான தொடக்கம்.
இந்திய அணிக்காக தங்களது பணியை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செய்கின்றனர் என்பதே இதன் பொருள்.
வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்லாது, சுழற்பந்து வீச்சாளர்களும், பகுதி நேர பந்துவீச்சாளர்களும் கூட சிறப்பாக செயல்படுகின்றனர்.
அயர்லாந்து அணியில் நிறைய இடது கை வீரர்கள் இருப்பதால், சுரேஷ் ரெய்னாவை பயன்படுத்த முடிவு செய்தேன். அதன்படி அவரும் தனது பங்கை சிறப்பாக செய்தார்.
அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், 9 உலகக் கிண்ணப் போட்டிகளை வரிசையாக வெல்வதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.