பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!- ரணில், ஜனாதிபதிக்கு அறிவிப்பு


பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்திலும் பொதுத்தேர்தல் இன்றி தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து குறிப்பிடப்படவில்லை என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மாதம் இரண்டாம் வாரமளவில் 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும், இதற்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கத் தவறினால் பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யாது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் மற்றும் 17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்தல் ஆகியனவற்றை மேற்கொள்ள சுதந்திரக் கட்சி விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இன்றி தேசிய அரசாங்கமொன்றை அமைக்குமாறு சுதந்திரக் கட்சி கோரிய போதிலும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, பொதுத்தேர்தலை நடத்தாது தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது பொருத்தமாகாது என பிரதமர், ஜனாதிபதிக்;கு தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது