பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்


கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்றின் பெர்னாண்டோவின் காரியாலயத்தில் இடம்பெற்ற அமைச்சுக்கள் பொறுப்பேற்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர்களாக: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எம்.ஐ.எம்.மன்சூர் மீண்டும் சுகாதார அமைச்சராகவும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக வீ.தண்டாயுதபானி கல்வி அமைச்சராகவும், துரைராஜசிங்கம், விவசாய அமைச்சராகவும்,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சி சார்பாக, ஆரியபதி கலபதி வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக சந்திரதாச கலபதியும்,
பிரதித் தவிசாளராக தமிழ் விடுதலைக் கூட்டணி சார்பாக பிரசன்னா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.