பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்த கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென தேசிய நிறைவேற்றுப் பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்தைத் தொடர்ந்து இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் விரிவாக பேசப்பட்டது என ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுப் பேரவை நேற்று கூடிய போது இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.