பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2015

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு - நீதிமன்றத்தில் ஒருவர் சரண்



சென்னையில்  உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஜெஎம் 6 நீதிமன்றத்தல் ஒருவர் சரண் அடைந்துள்ளார். இந்து இளைஞர் சேனா அமைப்பின் மாநில தலைவர் ஜெயம் பாண்டியன் என்பவர் சரண் அடைந்துள்ளார். 

தங்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் குண்டு வீசியதாகவும், போலீசார் தன்னை தேடிவருவதாக அறிந்ததால், தான் சரண் அடைந்துள்ளதாகவும் கூறினார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி மாரீஸ்வரி உத்தரவிட்டார்.