பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2015

நடிகர் முரளியின் தந்தை பன்றிக் காய்ச்சலால் மரணம்


நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா இயக்குனருமான எஸ்.சித்தலிங்கய்யா காலமானார்.

மேயர் முத்தண்ணா, பூதய்யனு மக அய்யு உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79). இவர் மறைந்த தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் தந்தை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், பன்றி காய்ச்சல் பாதிப்பில் இருந்து சித்தலிங்கய்யா குணம் அடைந்தார். ஆனால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவர் மரணம் அடைந்தார் என்றனர்.

  சித்தலிங்கய்யாவின் உடலுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.