பக்கங்கள்

பக்கங்கள்

13 மார்., 2015

சொந்தநிலத்தை ஆர்வமாக பார்வையிட்ட வளலாய் மக்கள்


கடந்த கால யுத்தத்தில் 1990 ஆம்  ஆண்டு இடம்பெயர்ந்த வளலாய் மக்கள் 25 வருடங்களின்  பின்னர் தங்களுடைய இடங்களை மிகவும் அவலாய் பார்வையிட்டனர். 
 

 

 

 

 
 

 
25 வருடகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவத்தேவைக்கான கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் கிராமம் இன்று மக்கள்  பார்வைக்கு விடப்பட்டது. 

 
புதிய அரசாங்கத்தினால் முதல்கட்டமாக 1000 ஏக்கர் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. இதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. 

 
அதனையடுத்து கடந்த புதன்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்ற அமைச்சின்  தலைவர் ஹரின் பீரிஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் இன்று வளலாய்ப்பகுதிக்கு மக்கள்  சென்று தங்களுடைய இடங்களைப் பார்வையிட முடியும் என்றும் இம்  மாதம் இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

 
அதற்கமைய இன்று காலை முதல் நண்பகல் வரை வளலாய்ப்பகுதியில் கோப்பாய் பிரதேச செயலரின்  மேற்பார்வையில் அலுவலகர்கள் காணி உரிமையாளர்களுக்கான பதிவினை மேற்கொண்டதுடன் மக்கள்  ஆர்வமாக தங்களுடைய நிலங்களைச் சென்று பார்வையிட்டனர்.

 

 

 

 
எனினும் தங்களுடைய நிலங்கள் விடுதலை செய்தமைக்கு நன்றிகளைக் கூறுவதுடன்  மகிழ்ச்சிகளையும் மக்கள்  வெளியிட்டிருந்தனர். 

 

 

 
எனினும்  மிகவும் பற்றைக்காடாக குறித்த பகுதி இருப்பதனால் எல்லைகளைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் வீடுகள் , கிணறுகள் அனைத்தும்  இடிக்கப்பட்டு தரைமட்டமாக உள்ளதாகவும் மக்கள்  கவலை வெளியிட்டுள்ளனர். 

 

 

 

 

 

 

 
குறித்த பகுதிக்கு வடக்கு மாகாண சபையின்  உறுப்பினர் சர்வேஸ்வரன், வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தனும்  வருகை தந்திருந்தனர்.