பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு காணிக்கான உரிமம் ; வழங்கி வைத்தார் யாழ் அரச அதிபர்


யாழ் மாவட்டத்தில் அரச காணிகளில் குடியமர்ந்தவர்களுள் 4 பிரதேச செயலர் பிரிவுகளை சேர்ந்த 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும்
நிகழ்வு  யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.



யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் காணி உறுதிப்பத்திரங்களை மக்களிடம் வழங்கி வைத்தார்.



அதற்கமைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 50 பேருக்கும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 40 பேருக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 91 பேருக்குமே இன்று காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



அதனடிப்படையில் முதற்கட்டமாக 4 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும்  ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு எதிர்காலங்களில் வழங்கப்படும் என்றும்  யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  தெரிவித்தார்.