பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

19 ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம்  நாடாளுமன்றில்  சமர்பிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் ரணில் விக்ரமசிங்க 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு  அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் அன்று நள்ளிரவு விசேட வர்த்தமானியும் வெளியாகியிருந்தது.

அதனடிப்படையிலேயே இன்று திருத்தச்சட்டம்  நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.