பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2015

காணாமற் போனோரின் புகைப்படங்களைப் பெறும் பொலிஸார்

 காணாமற்போனவர்களின் உறவி னர்கள் சிலரை அழைத்துள்ள பயங் கரவாதப் பிரிவுப் பொலிஸார், காணா மற்போனவர்களின் புகைப்படம்,
ஆவணங்கள் என்பவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

முறைப்பாடுகளையும் எழுதிப் பெற்றுக் கொண்ட அவர்கள், 4 மாதங்களின் பின்னர் தொடர்பு கொள்வோம். அல்லது வீட்டுக்கு வந்து நிலைமையைக் கூறுவோம்.என்றும் தெரி வித்தனர் என்று கூறப்படுகின்றது.
 
வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் ஆகிய இடங்களைச் சேர்ந்த சுமார் 13 பேரிடம் இவ்வாறு முறைப் பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் காணாமற்போனோ ரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.அங்கு சென்றபோது நாவலர் வீதியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத் துச் செல்லப்பட்டு தனித் தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்போது எப்போது, எங்கு காணாமற்போனார்கள் என்பது தொடர்பாக விவரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன என்று தெரிவிக் கப்பட்டது.
 
2013ஆம் ஆண்டு இறுதியிலும் இவ் வாறு பலர் சாவகச்சேரிக்கு அழைக் கப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய் யப்பட்டன. பின்னர் வவுனியாவி லும் பதிவு செய்யப்பட்டன. அவற் றைப் பொலிஸாரே பதிவு செய் தனர். மீண்டும் மீண்டும் அழைக் கப்பட்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றபோதும், எமது உறவுகள் இன்னமும் வரவில்லை என்று காணாமற்போனோரின் உறவினர்கள் அங்கலாய்ப்புடன் கூறினர்.