பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2015

இணக்க அரசியலிற்கு சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார்.

நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
ஆனால் சுரேஸ் போன்றவர்கள் தேவையற்றவற்றை கிழறுகின்றனர். கோத்தா முகாம் தொடர்பினில் சாட்சிகளை நிறுத்தப்போவதாக சவால்விடுகின்றார். இப்பிடி செய்தால் அரசு கோபம் கொண்டுவிடும். பிறகு எதையும் செய்யமுடியாது.
புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் தான் குழப்புகின்றனரென்றால் கூட்டமைப்பிலுள்ளவர்களும் குழப்புவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களில் சுமார் 700 பேர் வரையினில் திருகோணமலையினிலுள்ள கோத்தா தடுப்பு முகாமெனும் இரகசிய முகாமினில் வைக்கப்பட்டிருந்ததாக சுரேஸ்பிறேமச்சந்திரன் அம்பலப்படுத்தியிருந்தார்.
எனினும் அவ்வாறு ஏதுமில்லையென அரசு வாதிட்டுவரும் நிலையினில் சாட்சியங்களுடன் அம்பலப்படுத்த தயாராக இருப்பதாக அவர் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.