பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2015

ஆட்சி மாற்றத்தின் பின்னர் சுயமாக செயற்படுகிறோம் - வடமாகாண முதலமைச்சர்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் வடமாகாண சபை சுயமாக இயங்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னைய அரசாங்கத்தினால் வடமாகாண சபையினால் சுயமாக இயங்க முடியாத வகையில் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட நிலைமை காணப்பட்டது. 
ஆனால் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்த நிலைமையில் மற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.