பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2015

நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது




மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய
விருது வழங்கி கவுரவித்து வருகிறது.  அதன்படி 62வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சைவம் படத்தில் ’’அழகே... அழகே...’’ பாடல் எழுதிய நா.முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டும் தங்க மீன்கள் படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எழுதியதற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது 'குற்றம் கடிதல்' படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பிரம்மா இயக்கியுள்ளார்.

சைவம் படத்தில் அழகு அழகு என்ற பாடலை எழுதிய நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பாடகிக்கான விருதும் அழகு அழகு என்ற பாடலை பாடிய சித்ராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படத்தொகுப்புக்கான விருதைப் ஜிகர்தாண்டா பெறுகிறது.