பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

இனப்பிரச்சினை தீர்வுக்கு கால எல்லை வேண்டும்: ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை எம்.பி

று நாள் வேலைத்திட்டம் போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கும் கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரி
பாலவிடம் கோரிக்கை முன்வைத்தார் த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.
 
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
 
தமிழ் மக்களின் சார்பில் ஜனாதிபதி மைத்திரி பாலவை வரவேற்கின்றோம்.வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார நல்லிணக்கம் பற்றிக் குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பாணத்தில் வடபகுதியில் தமிழில் பேச வேண்டும். தென்பகுதியில் சிங்களத்தில் பேச வேண்டும் அந்த நிலைமை அவ்வாறானதொரு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.