பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2015

சுமந்திரனைக் கேலி செய்து யாழில் உருவப்பொம்மைகள்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்யும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த உருவப்பொம்மைகளை வீதிகளிலும், சுமந்திரனின் அலுவலகம், தமிழரசுக்கட்சியின் அலுவலகப் பகுதி, வடக்கு மாகாண சபை போன்றவற்றில் கட்டிவைக்கப்பட்டிருந்தது.
 
உருவப்பொம்மைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது. 
 
இதேவேளை, கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் சுமந்திரனின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டிருந்தமை குறிப்புிடத்தக்கது.