பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2015

காணாமல் போனவர் தொடர்பான இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு
                     
காணாமல் போனவர்களை கண்டறியும்  ஜனாதிபதி  ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. 
 
அதன்படி  ஜனாதிபதி  ஆணைக்குழுவின் பரிந்துரைகள்  மற்றும்  ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளைக் கொண்டதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த மாதம் இவ்வறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட இருந்த போதும் அது பிற்போடப்பட்டது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது என ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச ஏற்கனவே அறிவித்திருந்தார்.
 
கடந்த அமர்வினை திருகோணமலையில் நடாத்தியிருந்த ஆணைக்குழு அடுத்த அமர்வினை அம்பாறையில் நடாத்த ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.