பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2015

எங்கள் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வி/சரத் பொன்சேகா


தன் கட்சியின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 லட்ச வாக்குகளால் தோல்வியடைந்திருப்பார் என ஜனநாயக கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சி உறுப்பினர்களிடையே இடம் பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில்,ஜனநாயக கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருக்காவிட்டால் 4 இலட்ச வாக்குகளில் வெற்றியடைவதற்கு பதிலாக 10இலட்ச வாக்குகளால் ஜனாதிபதி தோல்வியடைந்திருப்பார்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய மூன்று தடவைகளும் தோல்வியடைந்திருப்பார்.எனினும் 2005ஆம் ஆண்டு விடுதலை புலிகள்,வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை வழங்காமல் புறக்கணித்தமையினால் மகிந்த  தேர்தலில் வெற்றியடைந்தார்.
2010ஆம் ஆண்டு எனது வெற்றியினை பறித்துவிட்டார். 2015ஆம் ஆண்டும் தோல்வியடைந்து விட்டார். அப்படி பார்க்கும் போது மூன்று தடவைகளும் மகிந்த ராஜபக்ச தோவ்வியடைந்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.