பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2015

இலங்கையர்களுக்கு இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுமா? மோடியின் வாக்குறுதி என்னவாகும்


இலங்கையில் இருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14 ம் திகதி தொடக்கம் ஒன் அரைவல் விசா
வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
எனினும் இது உடனடியாக வழங்கப்படுமா என தற்போது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் இது தொடர்பான எதுவித அறிவிப்பும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதுதொடர்பில் தமக்கு எதுவிதமான பதிலோ அறிவிப்போ வரவில்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரக முதன்மைச் செயலாளர் கொளரவ் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியாவில் ஒன் அரைவல் விசா பெறுவதற்குத் தகுதியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை.
அதேவேளை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்தியாவில் ஒன் அரைவல் விசா வழங்கப்படுவது தொடர்பாக தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.