பக்கங்கள்

பக்கங்கள்

11 ஏப்., 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு ஒத்திவைப்பு! புரிந்துணர்வு உடன்படிக்கை ஏப்ரல் 18ம் திகதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் இணைந்து செயற்படுவது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள அதன் அங்கத்துவ கட்சிகள் இணங்கியுள்ளன.
கட்சி தலைவர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோருக்கு இடையில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதேசசபை ஒன்றின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவதை காரணமாகக்கொண்டே இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்கப்பட்டு 18ஆம் திகதியன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.
இதேவேளை தேர்தல் ஆணையாளரால் புதிய கட்சிகள் பதிவு செய்யப்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.