பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2015

ஓகஸ்டிலேயே பொதுத் தேர்தல்; சபை கலைப்பு ஒத்திவைப்பு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றியப் பின்னர், மே 5 ஆம் திகதியளவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஜூனில்
பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடளுமன்றம் கலைப்பு ஜூன் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு ஜூனில் சபை கலைக்கப்பட்டு ஓகஸ்டில் பொதுத் தேர்தல் நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.
 
புதிய தேர்தல்முறை உருவாக்கத்துக்கு கால அவகாசம் தேவை என்பதாலேயேலே, ஆகஸ்டில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, தொகுதிவாரி மற்றும் விகிதாசாரமுறை உள்ளடங்களாக புதிய முறையிலேயே தேர்தல் நடைபெறும் எனவும் மேற்படி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.