பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2015

காணிகள் எங்கே?

25 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாதிருந்த காணிகளில் செழித்து வளர்ந்திருந்த பற்றைகளால், காணிகளையும் - வீடுகளையும்
இனங்காண்பதில் மக்கள் இடர்பாடுகளை எதிர்நோக்கினர். அத்துடன், காணிகளுக்குச் செல்லும் வீதிகளை மூடி இராணுவத்தினர் வேலிகள் அமைத்திருந்தமையால் மக்கள் தமது காணிகளுக்குச் செல்ல முடியாமல் அந்தரித்தனர்.
 
வலி.வடக்கில் 7 கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்று விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவும் பகுதியாக விடுவிக்கப்பட்டமையினால், இராணுவத்தினர் எஞ்சிய நிலத்தில் முகாம் அமைத்திருந்தனர். 
 
இராணுவ முகாம்கள், பல பிரதான வீதிகள், குச்சொழுங்கை களை ஊடறுத்து - மறித்து - அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் தமது காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும் செல்ல முடியாமல் அந்தரித்தனர்.
 
குறிப்பாகக் காங்கேசன்துறை தெற்கில் 109 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அந்தக் கிராமத்துக்கு தையிட்டியால் செல்லும் வீதியை மறித்து இராணுவத்தினர் முகாம் அமைத்திருந்தனர்.
 
இதன் காரணமாக, காணி விடுவிக்கப்பட்டு அதனைச் சென்று பார்ப்பதற்கு மக்கள் சிரமப்பட்டன. ரயில் பாதையினால் நீண்ட தூரம் சென்று, இராணுவத்தின் வேலியைச் சுற்றி வந்தே அவர்களது காணிகளைப் பார்வையிட்டனர்.
 
25 வருடங்களாக மக்கள் நடமாட் டம் இல்லாமல், பல வீதிகள் தூர்ந்து போயிருந்ததுடன் பற்றைகள் மேவி அவை இருந்த இடம் தெரியாமல் அழிவடைந்திருந்தன. சில இடங்களில் இராணுவத்தினர் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி எல்லாவற்றையும் ஒன்றாக்கியிருந்ததால் அடையாளங்களைக் காண்பதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.