பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2015

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்


 அரசமைப்பின்   19வது திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் நாடாளுமன்றம் சில
நிமிடங்கள் கூடியபோது எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.
 
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விசாரணைக்குட்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர் .
 
முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 
முன்னாள் ஜனாதிபதியையும் அவரது சகோதரர் கோட்டபாய ராஜபக்ஸவையும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு பணிக்க முடியாது என அவர்கள் வலியுறுத்தினர்
 
இவ்வாரத்தில் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஊழல்  மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது சகோதரருக்கும் அழைப்பாணை  யை அந்த ஆணைக்குழு  விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது