பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2015

20\\\' நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்; ஜனாதிபதி


19ஆவது திருத்தம் மற்றும்  20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே, நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். 
 
19ஆவது அரசமைப்பு திருத்தச்சட்டமூலத்துடன்  தேர்தல் முறை மாற்றத்தையும்  20 ஆவது திருத்தச் சட்டமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.
 
இந்த விவகாரங்களை ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏப்ரல் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்குச் செல்வது என்று வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.