பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2015

கனடிய மத்திய நிதியமைச்சின் செய்தி வெளியீடு முதன் முறையாக தமிழில்


கனடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் பங்களிப்பை கனடிய அரசு மிகவும் மதிப்பதோடு தமிழர்களிற்கான தகவலை தமிழில் வழங்கும் நடைமுறையை ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்தடவையாக அண்மையில் விவாதிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலுள்ள நண்மைகள் குறித்த விவரங்களை தமிழ் மொழியில் வழங்கியுள்ளது.
ஒன்ராறியோ மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாணக் கட்சியின் தலைவர் தெரிவிற்கான தேர்தலில் வாக்களிக்கவென 14,000 தமிழர்கள் இணைந்தார்கள் என்ற செய்தி வெளிப்படுத்திய ஒரு மாறுதலாகவே இந் நிகழ்வும் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு மற்றும் மத்திய கட்சிகள் இந்த விவகாரத்தை ஆச்சரியத்துடன் பார்ப்பதுடன், மாகாண கட்சித் தலைவர் தேர்தலில் தமிழர்கள் முழுமையாக வாக்களிக்கும் பட்சத்தில் தமிழர் சமூகம் ஒரு கனதியான சமூகமாக அங்கீகரிக்கப்படும் நிலை கனடாவில் தோன்றியுள்ளது.
அதையொத்த நிலையே மாகாண மற்றும் மாநகர அலகுகளிலும் ஏற்பட்டுள்ளது.