பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2015

பி.எஸ்.என்.எல் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் அமல்



பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இரவு நேர இலவச அழைப்பு சேவை திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இத் திட்டத்தின்படி இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை நாடு முழுவதும் லேண்ட்லைனில் இருந்து எந்த நிறுவனத்தின் மொபைல் அல்லது லேண்ட்லைன் எண்களுக்கு கட்டணமின்றி பேச முடியும். இந்த திட்டத்தின்கீழ், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து முக்கிய லேண்ட்லைன் பொது திட்டங்கள், லேண்ட்லைன் சிறப்பு திட்டங்கள் மற்றும் பிராட்பேண்டுடன் கூடிய லேண்ட்லைனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் பயன்பெறுவர் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. 

லேண்ட்லைன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் அதிக அளவாக 1 லட்சத்து 62,556 லேண்ட்லைன் வாடிக்கையாளர்களை இழந்தது. இதனையடுத்து வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் இரவு நேர இலவச சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது