பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விலை கொடுத்து வாங்க முடியாது



picvide

ன்னையோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எந்த உறுப்பினரையோ எவரும்  விலைக்கு வாங்க முடியாது என்று  கிழக்கு மாகாணசபையின் புதிய பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா நேற்று தெரிவித்துள்ளார்.
 
தனது பதவி பணம் கொடுத்து பறிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஊடகங்களில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
'கிழக்கில் மலர்ந்துள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களின் இன ஐக்கியத்தை கொச்சைப்படுத்தவும் சீர்குலைக்கவும் நினைக்கின்ற சுயநல வங்குரோத்து அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்களை மக்கள் பெரிதுபடுத்திக்கொள்ள வேண்டியதில்லை' 
 
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்மானத்துடனும் கொள்கைப்பற்றுடனும் இயங்கும் மக்கள் நிறுவனமாகும். பதவிகளுக்கோ, பணத்துக்கோ,  ஒருபோதும் நாம் சோரம் போனவர்களல்ல.
 
தற்போது கிழக்கு மாகாணசபையில் இன நல்லுறவுடன்  கூடிய நல்லாட்சிக்காக நாம் கை கோர்த்துள்ளோம். இது கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் சாத்தியமானதொரு விடயமாகும்.
இதனை பணம் கொடுத்து வாங்கப்பட்ட முடிவாக யாரும் கீழ்த்தரமாக எடை போடக்கூடாது.
 
கிழக்கில் மலர்ந்துள்ள இன ஐக்கியத்தை யாரும் சீர்குலைக்க நினைத்தால், அதுவே அவர்களது வங்குரோத்து அரசியலின் முடிவாக இருக்கும். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும்'  என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=570473954802253853#sthash.m8J2l8pl.dpuf