பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2015

உயர்தர மாணவனை தம்பியே அடித்து கொலை .புதுவருட புத்தாடை பகிர்வில் பிரச்சினை


முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நேற்று  இரவு, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளான்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.
 
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
 
புதுவருடத்துக்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளைப் பகிர்வதில் இரு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு அடிதடியாக மாறி பின் கொலையில் முடிந்தது.
 
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதேவேளை, கொலை செய்ததாகக் கூறப்படும் தம்பியை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் நடராஜா சுதர்சன் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.