பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2015

மகிந்தவிற்கு அடுத்த ஆப்பு தயாரானது
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் இழைத்த தவறுகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஜனாதிபதியாக பதவி வகித்த போது உயர்நீதிமன்றத்தில் தமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்ததாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தமிழ்,முஸ்லீம் மக்களைப் பிரதிபலிக்காத சிங்கக் கொடிகளை ஏந்தியவாறு கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் பிரதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.