பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2015

ஷிரந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய வங்கி கணக்குகள் சோதனை: நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சிரிலிய சவிய வங்கி கணக்குகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை சோதனையிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவிற்கு இவ் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிக் கணக்குகளின் ஊடாக குறித்த கணக்கு இலக்கத்திற்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணமாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.