பக்கங்கள்

பக்கங்கள்

27 ஏப்., 2015

மேஜிக் செய்த மலிங்கா: புகழ்ந்து தள்ளும் ரோஹித் சர்மா

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று ஐதராபாத்துக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா வேகத்தில் மிரட்டினார். அவர் 4 விக்கெட்கள் வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.
இது குறித்து மும்பை அணித்தலைவர் ரோஹித் சர்மா கூறுகையில், மேஜிக் செய்து விட்டார் மலிங்கா. அவர் ஒரு அனுபவ பந்துவீச்சாளர். தனது திறமையை பல ஆண்டுகளாக இலங்கை அணியிலும், மும்பை மும்பை அணியிலும் காட்டி வருகிறார்.
அவரிடம் அதிகமாக எதிர்பார்த்தேன். மிக சாதாரணமாக செய்து முடித்து விட்டார். யார்க்கர் பந்தால் எதிரணியை மிரட்டி விட்டார்.
அவர் மீது விமர்சங்கள் எழும் போது நான் அதிகமாக நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்கு ஏற்றவாறு அசத்தி விட்டார்.
இவரைத் தவிர, மெக்லினகன், வினய் குமாய், சுசித், ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.