பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையமா?







இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்திரனியல் உளவு மையம் என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மற்றும் தொடர்பாடல் மேம்படுத்தல் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் சீனா, இந்த உளவு மையத்தை உருவாக்கி வருகின்றது.
சீனாவின் இரண்டு பாதுகாப்பு நிறுவனங்களினால் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈபிள் கோபுரத்தை விடவும் 26 மீற்றர் உயரமுடைய தாமரைக் கோபுரமானது தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக உருவாக்கப்பட உள்ளது.
ஒரு புறத்தில் இந்தியாவையும் மறுபுறத்தில் இந்து சமுத்திரத்தையும் மையப்படுத்தி இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன எக்ஸிம் வங்கியின் நிதி உதவியுடன் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என இந்திய பாதுகாப்பு தந்திரோபாய ஆலோசகர் ஹஸ்கர் ரோய் தெரிவித்துள்ளார்.
இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டால் இந்தியாவினதும், தெற்காசியாவினதும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.