பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2015

தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை



 அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்தநாள் விழா, சென்னை பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது.   இவ்விழாவையொட்டி மாட்டுக்கறி விருந்து - பெண்ணடிமைத்தளையாம் தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து,நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அமர்வு  தாலி அகற்றிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கின் மறுவிசாரணயை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.