பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2015

கோத்தா புதனன்றும் மகிந்த வெள்ளியும் ஆஜர்


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரிடம் லஞ்ச
ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளது.

இந்த வாரத்தில் குறித்த இருவரிடமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்து கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய ராஜபக்ஸவிடம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணை நடத்தப்பட உள்ளது. லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் 24ம் திகதி லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பதவி வகித்த காலத்தில் சில நிறுவனங்களின் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார்.இந்த நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.