பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2015

சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளகுழப்பம்


எதிர்கட்சி தலைவர் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் குழப்பம் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு முன்னர் எதிர்கட்சி தலைவர் தொடர்பில் அறிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்த போதிலும் அதன் பொறுப்பை சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்கினார்.
சுசில் பிரேமஜயந்த எதிர்கட்சி தலைவர் தொடர்பாக புதுவருடத்தின் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்கட்சி தலைவர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் காரசாரமான நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தான் எதிர்கட்சி தலைவராக செயற்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை என அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டுள்ளமையினால் தான் எதிர் கட்சி தலைவராக செயற்பட தடையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.