பக்கங்கள்

பக்கங்கள்

2 ஏப்., 2015

பிரதேச அபிவிருத்திக்காக முழுமூச்சாக செயற்படுவோம்: விந்தன் கனகரத்தினம் உறுதி

பிரதேச அபிவிருத்திக்காக முழுமூச்சாக செயற்படுவோம்: விந்தன் கனகரத்தினம் உறுதி
எதிர்காலத்தில் மக்களின் தேவைகள் தொடர்பில் முறையான திட்டமிடல்களையும், பொறிமுறைகளையும் கையாண்டு, பிரதேச அபிவிருத்தியை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் முழுமூச்சாக கடமையாற்றுவோம் என வட மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குள் பதிவு செய்யப்பட்ட 12 விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒரு கழகத்திற்கு தலா  20 ஆயிரம் ரூபாபடி 2 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதியிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தீவுப்பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்து தீவக மக்கள் எதிர்நோக்கும் அன்றாட அடிப்படை பிரச்சனைகளான வாழ்வாதாரம், குடிநீர் தட்டுப்பாடு, பிரதேச அபிவிருத்தி, கல்வி, விளையாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்றார் எனவும்,
தீவகம் அடிவருடிகளின் ஆதிக்கத்தில் இருந்த போது கொள்ளை, கொலை, ஆட்கடத்தல், கற்பழிப்பு போன்றவற்றுக்கு குறைவில்லாமல் காணப்பட்டது எனவும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த மாதிரியான மோசமான நடவடிக்கைகள் குறைந்து உள்ளதை எம்மால் உணரமுடிகின்றது.
இந்த மாற்றங்களின் மூலம் மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம், விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.