பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2015

ஜெயலலிதா பதவி ஏற்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு பரபரப்பு
தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆர். குர்கர்னிக்கு  எனபவர்  பொது நல் அவழக்கு ஒன்றை தக்கல் செய்தார். இந்த் பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதிகள் வேணுகோபால் கவுடா மற்றும் வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு விசாரணையின் முடிவில் நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

மேலும் விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கில் பொதுநல வழக்கு தொடர்ந்ததாக மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞர் ஆர். குர்கர்னிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.