பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

மத்திய பிரதேச மாநிலத்தில் பயங்கர விபத்து: 35 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த பஸ் கீழே விழுந்து தீப்பிடித்ததில்35 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போபாலில் இருந்து 550 கிமீட்டர் தொலைவில் உள்ள பன்னா மாவட்டம் சாட்டர்பூரில் இருந்து சாத்னா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 15 அடி ஆழத்தில் உள்ள நீரோடையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் பஸ் தீப்பிடித்ததால் பயணிகள் வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 35  பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   மேலும் 18 பேர் பேர் காயம் அடைந்துள்ளனர்.   மருத்துவமனையில்  அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஓடையில் விழுந்ததால் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.