பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2015

தமிழ்நாட்டில் இருந்து 65 அகதிகள் நாளை நாடு திரும்புகின்றனர்

போரின் போது நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தமிழ்நாட்டில் அடைக்கலம் தேடியிருந்த 65 இலங்கைத் தமிழர்கள்
நாளை சிறிலங்காவுக்குத் திருப்பி அழைத்து வரப்படவுள்ளதாக, சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் தன்னார்வ மீள்திரும்பல் திட்டத்தின் கீழேயே இவர்கள் சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
திருச்சியில் இருந்து 41 அகதிகளை ஏற்றிய சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், நாளை காலை 10.35 மணியளவில், கட்டுநாயக்கவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,சென்னையில் இருந்து மேலும் 24 அகதிகளை ஏற்றிய மற்றொரு சிறிலங்கன் விமானம், நாளை காலை 11.10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
இவர்களுக்கான பயண ஒழுங்குகளை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் மேற்கொண்டுள்ளது. நாடு திரும்பும் அகதிகள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.y