பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2015

தாய்மையில் 92 ஆவது இடம் வகிக்கும் இலங்கை

தென்னாசியாவில் இலங்கை மற்றும் மாலைதீவு என்பன தாய்மையில் சிறந்த இடங்களை பெற்றுக் கொண்டுள்ளன.
 
சேவ் த சில்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள 'உலகளாவிய அன்னை 2015' பட்டியலிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகலாவிய ரீதியில் 179 நாடுகளில் இலங்கை 92 ஆம் இடத்தில் உள்ளதுடன் மாலைத்தீவு மற்றும் ஜமேக்கா என்பன அதே இடத்தில் உள்ளன.
 
இதேவேளை,  கடந்த வருடம் வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை 89ஆவது இடத்தில் இருந்தது.
 
1400 பேருக்கு 1 என்ற நிலையில் இலங்கையில் தாய்மார் மரணவீதம் காணப்படுவதாக அந்த பட்டியலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
நோர்வே.பின்லாந்து, ஜஸ்லாந்து,, டென்மார்ன் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உலகளாவிய ரீதியில் முதலிடத்தில் உள்ளன.
 
இதேவேளை. மோசமான நாடுகள் பட்டியலில் சோமாலியா, பொங்கோ குடியரசு, மத்திய ஆபிரிக்கா, மாலி மற்றும் நைஜர் ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன