பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2015

காதலுக்கு எதிர்ப்பு: துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி


உத்தரபிரதேசத்தில் காதல் ஜோடிகள் மரம் ஒன்றில் துப்பட்டாவின் இரு முனைகளால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
முசாபர் நகரைச் சேர்ந்த ரஜனீஷ் (22) என்பவரும், அதே பகுதியில் வசிக்கும் இம்ரானாவும் (18) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இம்ரானாவின் காதல் அவரது குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஜனீஷ் அவரது குடும்பத்தாரிடம் பேசி, இம்ரானாவை திருமணம் செய்ய நினைத்துள்ளார்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்துவான ரஜனீஷை, இம்ரானாவின் குடும்பம் ஏற்க மறுத்துள்ளது.
இந்நிலையில் ஊருக்கு வெளியே உள்ள மரம் ஒன்றில், துப்பட்டாவின் மூலம் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தைக் பற்றி இம்ரானாவின் தாயார் கூறுகையில், எங்களைப் பொறுத்த வரை இது தற்கொலை என்றும் காவல் துறை இது பற்றி விசாரித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.