பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2015

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.

காடையர் கூட்டத்தினால் சீரழிக்கப்பட்டு , கொலை செய்யப்பட்ட மாணவி
செல்வி. சிவலோகநாதன் விந்தியா மரணம் பேரிடியானது.
இவரின் குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையான குற்றவாளிகளுக்கு மிக கொடூரமான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது போன்ற விஷக் கிருமிகள் சமுகத்திலிருந்து முற்றாக அழிக்கப் பட வேண்டும். அது, இது போன்றவர்கள் சார்ந்த சமுகத்தினால் மட்டுமே முடியும். என்பதோடு
இந்த ஈனச் செயலை புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - சுவிஸ் கிளை வன்மையாகக் கண்டிக்கிறது.