பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2015

உலகத் தமிழர் பேரவையுடன் தென்னாபிரிக்க அரசாங்கம் இலங்கை தொடர்பில் பேச்சு


இலங்கை தொடர்பில் லண்டனை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை இன்று தென்னாபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது.
தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகளுக்கான பிரதியமைச்சர் (ஆள. ழேஅயiனெலைய ஊ ஆகநமநவழ ஆPஇ)நொமெய்ன்டியா சி பெகேடாவின் அழைப்பின்பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது உலகத்தமிழர் பேரவை தரப்புக்கு எஸ் ஜே இமானுவெல் அடிகளாரின் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
தென்னாபிரிக்க குழுவில் உதவி அமைச்சருடன், பிரித்தானியாவுக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ஒபெட் லாபா, ஆசிய மற்றும் மத்திய கிழக்குக்கான உதவிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனில் சூக்கல், தென்னாபிரிக்க உதவி ஜனாதிபதியின் ஆலோசகர் நொகுஹான்யா ஜெலெ, தென்னாசிய உதவிப் பணிப்பாளர் டைல்மேன் பேட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.