பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2015

தடையுத்தரவை தாண்டி வித்தியாவிற்கு ஆதரவாக கல்முனையில் ஆர்ப்பாட்டப் பேரணி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின்
மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை பாடசாலைகளின் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிறைவடைந்தது.
இதன் காரணமாக இன்று கல்முனை பகுதிகள் எங்கும் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், அனைத்து வியாபார தளங்களும் மூடிக்காணப்பட்டது. புங்குடுதீவு மாணவியின் படுகொலையினை கண்டித்து வட கிழக்கில் உள்ள பாடசாலைகளின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.க்கது.