பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2015

கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை?


கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கட்சியின் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பதவி விலகுமாறு கோரி விசேட மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது எதிர்வரும் வாரத்தில் நாடு முழுவதிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் விஹாரமஹாதேவி பூங்காவில், கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்று கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதியிடம் கோரும் ஆவணம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பாவிடம் இந்த ஆவணம் ஒப்படைக்கப்படவுள்ளது