பக்கங்கள்

பக்கங்கள்

16 மே, 2015

தந்திர கட்சியில் பிளவு: மகிந்த திருடர்களுடன் பேச்சுவாரத்தை





சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படமாட்டார் என  தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த மகிந்த தரப்பினர் புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். 
கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களும், இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பல இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதிய வாக்கு வங்கிகள் இல்லாத சில கட்சிகளும், ஐக்கிய தேசிய கட்சியின் மீது அதிருப்தியிலுள்ள சிலரும் குறித்த பேச்சுவார்த்தையில் இணைந்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இனவாதத்தை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் அமைப்பொன்று இறுதி தருணத்தில் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக  அந்த அரசியல் வட்டார தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.