பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

பெங்களூர் ஐகோர்ட்டில் குவிந்த அ.தி.மு.க தொண்டர்கள்


ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், பெங்களூருவில் அதிமுகவினர் குவிந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் கோர்ட்டுக்குள் அவர்கள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை கோர்ட்டை சுற்றி 1 கி.மீ தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேருக்கு மேல் அங்கு 

 வெள்ளிக்கிழமை இரவு முதலே தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு அதிமுகவினர் படையெடுக்க தொடங்கினர்.எல்லைபகுதிகளிலுள்ள பாதுகாப்பையும் மீறி கட்சிக்காரர்கள் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

ஹைகோர்ட் வளாகத்தில், 2 டி.சி.பி, 20 ஏ.சி.பி, கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையின் 10 பட்டாலியன் குழு, ஆயுதப்படையின் 3 பட்டாலியன் குழு உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்

இன்று காலை அதில் பலர் ஹைகோர்ட் பகுதிக்கு வந்தனர். அவர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. போலீஸ் கெடுபிடியை எதிர்பார்த்த சில அதிமுகவினர் வழக்கறிஞர்கள் உடையுடன்  வந்திருந்தனர்.  ஆனால், அவர்கள் பேசிக்கொண்டதை கவனித்த காவல்துறையினர், எச்சரித்து விரட்டி விட்டனர்.

 சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. தீர்ப்பு முடிவு பாதகமாக ஜெயலலிதாவிற்கு அமைந்தால், அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என மக்கள் கருதுவதால், சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது, இன்று காலை கர்நாடகா ஹைகோர்ட்டில் தீர்ப்பு வழங்கப் பட உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு இது என்பதாலும், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினாலும் இந்தத் தீர்ப்பு தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, தீர்ப்பு ஜெயலலிதாவிற்கு பாதகமாக வந்தால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் அசம்பாவித செயல்களில் ஈடுபடலாம் என்ற பதட்டம் மக்கள் மனதில் உள்ளது. அமைதி காக்கவும் என ஜெயலலிதா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.