பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2015

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா மீண்டும் போட்டி?


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானதையடுத்து, வரும் 17ஆம் தேதி முதல் அமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே அவர் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதற்காக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வளர்மதி, தனது எம்.எல்.ஏ., பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் ஸ்ரீரங்கம் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும் என கூறப்படுகிறது.