பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2015

இறுதிப்போட்டிக்கு நுழைவது யார்? சென்னை–மும்பை இன்று பலப்பரீட்சை



8வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டம் முடிந்தன. இதன் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

‘பிளேஆப்’ சுற்று இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடை பெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்–ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி 2–வது தகுதி சுற்றில் விளையாடும்.

சென்னை அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.