பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2015

யாழ்.நீதிமன்றம் தாக்குதல் : 14 பேருக்கு பிணைமுறி, ஏனையோர் தொடர் மறியலில்


யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்டமை , சிறைச்சாலை வாகனத்தை சேதமாக்கியமை, சட்டவிரோத கூட்டம் கூடியமை
மற்றும் பொலிஸாரைத் தாக்கியமை தொடர்பிலான 4 குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட 66 பேர் இன்று யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
அவர்களில் 14 பேருக்கு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான சொந்த பிணைமுறியில் செல்ல யாழ். நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.
 
மேலும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏனைய 54 பேரையும் எதிர்வரும் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
 
இதேவேளை,  கடந்த மாதம் 20 ஆம் திகதி  யாழ். நீதிமன்ற வளாகத்தில் கூடியவர்களினால் நீதிமன்ற கட்டட தொகுதி உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.