பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜூன், 2015

போதைக்கு எதிரான போர்


வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனமும் யாழ் மாவட்ட றோட்டறிக் கழகமும் இணைந்து போதை பாவனைக்கு எதிரான நடை பவணி ஒன்றை இன்று நடாத்தியிருந்தது.
 
குறித்த நடை பவணியானது சித்தங்கேணி சிவன் ஆலயத்தில இருந்து சங்கானை பேரூந்த தரிப்பிடம் வரை சென்று அங்கு குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றது.
 
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், யாழ் றோட்டறி கழக தலைவர் அனுராஜ், இந்து மத குருமார் ஒன்றியத்தின் தலைவர் வாசுதேவ குருக்கள், வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர், வலி மேற்கு பிரதேச செயலர், சங்காணை மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.